திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

0 1933
திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

பல்லடம் அருகே காரணம்பேட்டை நெடுஞ்சாலையோரம் வீட்டில் தனியாக வசித்து வந்த வழக்கறிஞரின் தாய், கை கால்களை கட்டி மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டை நெடுஞ்சாலையோரம் வசித்து வந்தவர் கண்ணம்மாள்.

இவரது கணவர் சுப்பையன் என்பவர் உயிரிழந்த நிலையில் இவரது இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் திருப்பூர் மற்றும் பல்லடம் ஆகிய பகுதிகளில் வசித்து வருகின்றனர். வழக்கறிஞரான மக்களின் பராமரிப்பில் கண்ணம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இவரது வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்த போது வீட்டுக்குள் முகம், கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் வெள்ளிக்கிழமை இரவு கண்ணம்மாலின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை தாக்கி மிளகாய் பொடியை தூவி சேலையால் முகத்தையும், கை கால்களையும் இறுக்கமாக கட்டிப்போட்டதால் கண்ணம்மாள் மூச்சு திணறி இறந்து இருக்கலாம் என்றும், அதன் பின்னர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

எவ்வளவு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது என சம்பவ இடத்தில் பல்லடம் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையின் அருகிலேயே அரங்கேறி உள்ள இந்த கொலை கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments